பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. ‘சந்திரமுகி -2’ சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்

308 0

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Raghava Lawrence Apologizes as Students Attacked at Chandramukhi 2 Audio  Launch - Cast Crew, Chandramukhi, Key Cast, Music Launch, Raghavalawrence,  Unpleasant |இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, சந்திரமுகி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை. சந்திரமுகி என்ற பெயர் மட்டுமே ஒன்றாக இருக்கும். ஜோதிகா, சந்திரமுகியாக நினைத்துக் கொண்டார். ஆனால், இந்த பாகத்தில் உண்மையான சந்திரமுகி வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. வேட்டையன் கதாபாத்திரத்தில் சிறிய சஸ்பென்ஸ் இருக்கிறது.

ரஜினி சார் நடிப்பை விட அதிகமாக நடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அது வரவும் செய்யாது. அவரது நடிப்பை அடித்துக்கொள்ள முடியாது. ரஜினி சார் ரஜினி சார் தான். மாமன்னன் பட வடிவேலுவுக்கும் சந்திரமுகி வடிவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ‘மாமன்னன்’ படத்தில் வடிவேல் அழுதால் நமக்கு அழுகை வரும் சந்திரமுகியில் வடிவேல் அழுதால் நமக்கு சிரிப்பு வரும்” என்று கூறினார்.

Related Post

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி.

Posted by - January 6, 2026 0
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து…

பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்.. பாலாவை நெகிழ வைத்த சூர்யா

Posted by - December 19, 2024 0
நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.…

அயோகியர்களின் ஆட்டம் தான் துணிவு.. எச். வினோத்தின் வெறித்தனமான அப்டேட்

Posted by - December 4, 2022 0
துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கலுக்கு…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

Posted by - April 4, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *