மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

195 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். சில மாதங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர்.காதலி மிரட்டியதால் மணமகன் தப்பியோட்டம்.. விருந்தினராக வந்திருந்த உறவினரை  மணந்த மணமகள்.. என்ன நடந்தது?

இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணி கணக்கில் போனில் பேசி வந்தனர். வைஷ்ணவ் தங்களது பெற்றோரிடம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைஷ்ணவ்க்கும் இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது. அப்போது வைஷ்ணவ் தனது வருங்கால மனைவிக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பில் வைர மோதிரம், ரூ.10 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள், ஓட்டல் மற்றும் உணவுக்காக ரூ.30 லட்சம் என ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார்.

வைஷ்ணவ் மிகுந்த உற்சாகத்தில் திருமண நாளை நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார். கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வைஷ்ணவுக்கு போன் செய்த இளம் பெண் அவசரமாக ரூ.7 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் தனது தந்தையிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு இளம் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இதனால் இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.அப்போது வைஷ்ணவ் இளம்பெண்ணை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் வீட்டிற்கு வேகமாக சென்றார் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து அவர்கள் வைஷ்ணவ் பெற்றோரை அழைத்து உங்கள் குடும்பம் எங்களது அந்தஸ்திற்கு ஏற்றது இல்லை. மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை தாக்கியதால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை. என தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவ் மணமகள் வீட்டாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.

அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை குடிபோதையில் தாக்கியதாக வைஷ்ணவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

சிபில் ஸ்கோர் தேவையே இல்லை..Dont Worry! கடன் பெற சிறந்த வழிகள் இதோ..!!

Posted by - December 11, 2024 0
உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.…

ராஜஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

Posted by - June 7, 2023 0
ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்…

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *