மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

177 0

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடத்தியது தமிழக அரசு. அதற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் (ஆகஸ்ட் 21) மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார் நடிகர் விஜய். இப்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து ஒரு அரசியல் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மதுரையில் விஜய் மாநாடு கூட்டிய அதே நாளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களில் 20 சதவீதம் பேர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் (வழக்கமாக இது 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்குமாம்). “இவர்கள் தங்களது விடுப்புக்கான காரணங்களை வேறாகச் சொல்லி இருந்தாலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு செல்வதற்காகவே இவர்களில் பெரும்பகுதியினர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்” என்று அடித்துச் சொல்கிறார்கள் தென் மாவட்ட அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர்.மேலும் அவர்கள், “அரசுக்கும் இது அதிர்ச்சியளிக்கும் செய்திதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் விஜய் பக்கம் சாயலாம் என்று ஒரு கணிப்பு இருக்கும் நிலையில், விஜய் மாநாட்டுக்காக கல்லூரி மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றிருப்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டதால் தான் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களையும் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து இரவு 8 மணி வரை நேரலையும் செய்யப்பட்டது.இந்த நேரலையை அரசுக் கல்லூரி மாணவர்களை பார்க்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகங்கள் பெரிய அளவில் மெனக்கிட்டன. இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை அவர்கள் மனதில் பதியவைப்பதற்காக தமிழகம் முழுவதுமே தொடர் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. இந்த நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துவர வேண்டும், அவர்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றெல்லாம் கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.” என்று சொன்னார்கள். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இன்னும் யார் யாருக்கு எல்லாம் எனிமா கொடுக்கப் போகிறதோ!

Related Post

சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

Posted by - November 13, 2025 0
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான…

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Posted by - April 20, 2026 0
தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - February 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *