இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

94 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தவாறு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து 28-வது நாளாக சென்னை எழும்பூர் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தல்: இந்த போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கும் சூழலில், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன.

தற்போதைய சூழலில், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தற்காலிக ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தாலும் மாணவர்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Post

ASS

வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்

Posted by - April 23, 2026 0
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி…
Generated Image February 03 2026 11 32AM

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - February 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…
tn

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

Posted by - July 18, 2025 0
மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர்,…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *