“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

214 0

இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னர் மேடையில் பேசிய வடிவேலு, எனக்கு கேப்பே கிடையாது. மீம்ஸ் மூலம் எப்போதும் உங்களுடன் தான் இருக்கேன். ஒரு சிறந்த கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். உதயநிதி ஒரு சிறந்த கதையை தேர்தெடுத்துள்ளார். இந்த கதையில் நடித்தது பெருமையாக உள்ளது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்னை பாட வைத்திருக்கிறார். என்னுடைய தாய் என்னை பாட தூண்டி, இந்த படத்தில் எனக்கு வெற்றி முகத்தை கொடுத்துள்ளார். அவரை நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். இந்த கதையை வைத்து பலரும் பல அனுமானங்களை செய்து வருகிறார்கள். இது ஒரு சுயமரியாதை கலந்த படமாக இருக்கும்.இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார். அரசியலில் மக்கள் பணி செய்யவிருப்பதால், இதை நிறுத்தி வைத்துள்ளார்.வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவன். அதே விஷயம் மாரி செல்வராஜிடமும் இருந்தது. ஊசி முனையைவிட கூர்மையாக காட்சிகளை எடுக்கிறார். மாரி செல்வராஜின் வலியை சொல்லியுள்ளார். அந்த வலி எல்லா மனிதர்களிடமும் உள்ளது.இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி மன்னன். இது போன்ற படத்தில் மீண்டும் நடிக்க ஆசை. ஆனால் இம்மாதிரியான படங்கள் கிடைப்பது கஷ்டம் என தெரிவித்தார்.இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

Related Post

ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை…

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 18, 2023 0
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…

🎉 43வது பிறந்தநாள்: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Posted by - February 3, 2026 0
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு). நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக…

பாண்டிச்சேரியில் உல்லாசம், நயன்தாரா தனுஷ் விவகாரம்.. தனுஷ் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - November 18, 2024 0
நயன்தாரா தனுஷ் இடையேயான கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தான் இன்று சமூக வலைதளங்களில் பல கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக சிக்கியுள்ளது. இதை பற்றி, நாட்டிற்கு ரொம்ப முக்கியமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *