லோகா முதல் டியூட் வரை… இந்த தீபாவளிக்கு திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

234 0

இந்த தீபாவளிக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களின் லிஸ்ட் இதோ

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் , பைசன் , டியூட் , டீசல் , லோகா , தம்மா

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ நடித்துள்ள படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் டியூட் திரைப்படம் வெளியாக இருக்கிறதுசண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறதுநீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , பசுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கபடியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதுஇந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா , ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ஹாரர் காமெட்டி திரைப்படம் தம்மா. ஆதித்யா சர்போட்கார் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.பெல்லம்கொண்டா சார் ஶ்ரீனிவாஸ் ,மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இயகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றிபெற்ற படம் கிஷ்கிந்தாபுரி. ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் அட்கோபர் 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறதுதுல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் , நஸ்லென் , சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடித்த படம் லோகா. கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது லோகா. மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ள லோகா 1 சந்திரா வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது

Related Post

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

40வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ச்சைகளின் ராணி.. ராஜ வாழ்க்கை வாழும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு

Posted by - November 18, 2024 0
கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா தான் சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். தனுஷ் மீது ஒரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இவரை ரசிகர்கள் பிறந்தநாள் என்றும் பாராமல் இன்றும் ரோஸ்ட் செய்து…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன

Posted by - July 1, 2025 0
சித்தாரே ஜமீன் பர் இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன்…

ரியோவின் ஜோ படத்திற்கு குவியும் பாராட்டுகள்..5 நாட்களில் இத்தனை கோடி வசூலா

Posted by - November 30, 2023 0
ஜோ நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில் உருவான ஜோ திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *