தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

189 0

கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய, அப்போது புஸ்வாணம் வெடித்தது. அதனால், அந்தக் குழந்தையின் கண்ணில் பலத்த காயம். அந்தக் குழந்தை பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது.

வெடிக்காத பட்டாசை தொடக் கூடாது என்கிற விழிப்புணர்வு அந்தக் குழந்தைக்கு இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் பார்வையைப் பாதுகாத்திருக்கலாம். பட்டாசு விபத்துகளை ஆய்வு செய்தால், 90 சதவீதம் கீழ்க்கண்ட விழிப்புணர்வு இருந்திருந்தால், அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றும்.அரசின் வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றியும், பட்டாசு பற்றிய விழிப்புணர்வு, அலட்சியமின்மை இல்லாமல் இருந்தால் தீக்காயம், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட விபத்துகளைத் தவிர்க்கலாம்.விபத்தைத் தவிர்க்கும் வழிகள்: * பட்டாசுகளை எளிதில் தீ பிடிக்கும் இடங்க ளான சமையல் அறை, பூஜை அறையில் வைக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் பெற்றோர் உதவியுடன் வெடிக்க வேண்டும்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அவர்கள் பட்டாசைத் தொட்டுவிட்டுக் கண்ணைத் தேய்க்கும்போது, அதில் உள்ள வெடிமருந்து கண்ணில்பட்டு,கண் உறுத்தல் ஏற்படும். இதைத் தவிர்க்க பட்டாசு வெடித்து முடித்த வுடன் குழந்தைகளைக் கைகளைக் கழுவ அறிவுறுத்த வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகே ஒரு முழு பக்கெட் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் தீயை அணைத்துவிட வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது தள்ளி நின்று நீண்ட ஊதுவத்திகளைக் கொண்டு வெடிக்க வேண்டும்.
* ராக்கெட்டைக் கண்ணாடி பாட்டில் அல்லது தகர டின்னில் வைத்து வெடிக்கக் கூடாது.
* ராக்கெட், பெரிய வெடிகளைக் குழந்தை களுக்கு வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடி ‘பாலிகார்பனேட்’டால் ஆன (Polycar bonate) உடையாத கண்ணாடியை அணிந்து கொள்ளலாம்.
வெடிக்காத பட்டாசுகளைத் தொடக் கூடாது. மீண்டும் வெடிக்க வைக்க முயலக் கூடாது. அவற்றைத் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட வேண்டும்.
* சாலைகள், தெருக்கள், குடியிருப்பு நிறைந்த பகுதிகளைத் தவிர்த்து, திறந்தவெளியில் வெடிப்பது நல்லது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றினாலே 50 சதவீத விபத்துகளைத் தவிர்க்கலாம்.

தாமதம் தவிர்ப்போம்: இரவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்படும் போது, இன்று திருவிழா நாள் என்பதால் கண் மருத்துவர் எங்கும் இருக்க மாட்டார் என்கிற எண்ணத்தில் அடுத்த நாள் தாமதமாக சிகிச்சைக்கு செல்லக் கூடாது. இந்தத் தாமதத்தால் பலர் கண் பார்வையை இழந்துவிடு கின்றனர். உடனடியாகச் சிகிச்சை எடுத்தால் பார்வையைப் பாதுகாக்க முடியும்.

எங்கே செல்லலாம்? – தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவை அணுக லாம். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கலாம். தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிப்பது காற்று மாசுபாட்டைத் தூண்டி முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், ஆஸ்துமா தொந் தரவு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. எனவே, உடல்நல பாதிப்பு, பார்வையிழப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக் கொள்வோம்.

செய்யக் கூடாதவை: பட்டாசு வெடித்துக் கண்ணில் காயம் ஏற்பட்டவுடன் செய்யக்கூடாத நான்கு செயல்கள்:

1. கண்ணை தேய்க்கக் கூடாது.
2. அழுத்தக் கூடாது.
3. ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கண்ணில் ஊற்றக் கூடாது.
4. மருத்துவரை அணுகாமல் மருந்துக் கடை களில் மருந்து வாங்கி ஊற்றிவிட்டு, கிருமி பாதிப்பு அதிகமான நிலையில் வந்தால் சிகிச்சை பலனின்றி பார்வையிழப்பு ஏற்படும்.

செய்ய வேண்டியவை

பட்டாசு வெடித்து கண்ணில் காயம் பட்டால் முதலில் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய அறிவுரைகள்:

1. கண், உடலில் உள்ள அனைத்து தீக்காயப் பகுதிகளையும் உடனடி யாகச் சுத்தமான குடிநீரால் நன் றாகக் கழுவ வேண்டும்.
2. பிறகு தாமதமில்லாமல் அருகே உள்ள மருத்துவமனையின் அவசர
சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும்.
இதனால் கண், உடல் பகுதிகளில் வெப்பம், வேதிப்பொருள் பாதிப்பு (Thermal and chemical injury) குறையும்.

Related Post

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

Posted by - March 6, 2023 0
H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில…

‘பாரத் மாதா கி ஜே’ திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

Posted by - December 4, 2022 0
கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா…
45

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022 0
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *