வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

200 0

தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில் மீண்டும் ஒரு படமாக வந்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

கதை

70களில் வடக்குப்பட்டி என்ற ஊரில் காட்டேரி சுற்றி வருவதாக இருக்க, ஒரு நாள் அந்த காட்டேரி சந்தானத்துக்கு சொந்தமான நிலத்தில் அடிபட்டு விழுகிறது.

அங்கு ஒரு திருடன் திருடி வந்த பானையை சாமி என்று மக்கள் கும்பிட, கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம் தன் நிலத்தில் பானை இருப்பதால், அங்கையே கோவில் கட்டி பணம் சம்பாதிக்கிறார்.

அதை தொடர்ந்து அந்த ஊர் வட்டாச்சியாளர் சந்தானம் உதவியுடன் கோவிலில் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்க, அதற்கு சந்தானம் மறுக்க, பிறகு அவர் சில சூழ்ச்சி செய்து கோவிலை மூடுகிறார், பிறகு ஊர் ஒன்று சேர்ந்ததா, கோவில் திறக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.

பட-அலசல்

எப்போதும் படம் முழுவதும் கவுண்டர் வசனங்களால் நிரப்பும் சந்தானம் இதில் அடக்கி வாசித்துள்ளார், அவருடன் வரும் மாறன், சேஷு தான் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே கலக்குகின்றனர்.

அதிலும் ஊர் மக்களுக்கு மெட்ராஸை நோயை பரப்ப, சென்னை வரை சென்று சேஷு மாறன் செய்யும் சேட்டைகள் வயிறு குழுங்க சிரிக்க வைக்கிறது.

ஆனால், அந்த சிரிப்பு படம் முழுவதும் உள்ளதா என்றால் கேள்விக்குறி தான். மேகா ஆகாஷ் ஏதோ 10 நாளைக்கு ஒரு நாள் கால்ஷிட் கொடுத்தது போல் எப்போதாவது படத்திலும் வருகிறார், போகிறார்.

படத்தில் இரண்டு பெரிய தலைக்கட்டுகளாக காட்டப்படும் ஜான் விஜய், ரவி மரியா அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது அவர்கள் முட்டாள் தனங்களை காமெடியாக எடுத்துள்ளனர், அதற்காக வடிக்கட்டிய முட்டாள் போல் காட்டியது, சரி காமெடி படம் லாஜிக் பார்க்க கூடாது தான்.

ஊருக்குள் சண்டை வரகூடாது, வந்தால் கோவில் திறக்காது கழகத்தை மூட்ட ஒரு கூட்டணி, அதை அடக்க ஒரு கூட்டணி என்று சுவாரஸ்ய கதையில் அங்கும் இங்கும் காமெடி காட்சிகளை வைத்து முடிந்தளவிற்கு ஒரு பொழுதுப்போக்கு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அது வெறும் முயற்சியாகவே போனது தான் வருத்தம்.

மூட நம்பிக்கை வைத்து ஒரு படம் என்றால் கிளைமேக்ஸில் எதோ ஒரு வகையில் மக்களுக்கு தெளிவு வரவேண்டும், பெயருக்கு எம் எஸ் பாஸ்கரை வைத்து 4 வசனம் பேசி மீண்டும் அந்த மூடநம்பிக்கை உலகிலேயே மக்களை கொண்டு செல்வது போல் முடித்துள்ளனர், நம்பிக்கையாக காட்டியிருக்கலாம், மூட நம்பிக்கையாக இல்லாமல்.

PLUS

மாறன், சேஷு காம்போவில் வரும் காட்சிகள் அட்டகாசம்.

கிளைமேக்ஸில் வரும் மொட்டை ராஜேந்திரன் காட்சிகள்.

Flops

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.

மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம்.. ஆமாங்க அந்த கவுண்டமணி காமெடி தான்…

Related Post

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - January 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…

வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

Posted by - February 3, 2024 0
சாக்ஷி அகர்வால் நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.…

தமிழ் புத்தாண்டை குறிவைத்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஐந்து படங்களின் லிஸ்ட் இதோ

Posted by - March 18, 2023 0
வரும் தமிழ் புத்தாண்டை ரணகளம் ஆகும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ராகவா லாரன்ஸின்…

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Posted by - July 22, 2024 0
பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான்…

சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted by - September 1, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *