விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.? பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

163 0

 சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் பா ரஞ்சித் மறைக்கப்பட்ட நம் முன்னோர்களின் வரலாற்றை சொல்லிய விதமும் அதற்கு விக்ரம் தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த விதமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்திற்குப் பின் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு தங்களுடைய உழைப்பை கொடுத்துள்ளனர் என்பதும் திரையில் தெளிவாகவே தெரிகிறது.

அதேபோல் இன்னொரு நாயகனாக தன் இசையின் மூலம் மீண்டும் கைத்தட்டலை வாங்கி இருக்கிறார் ஜி வி பிரகாஷ். அதேபோல் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் கேரக்டரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.

இப்படியாக தங்கத்தை தேடிச் சென்ற முன்னோர்கள் எந்த அளவுக்கு வலியை கடந்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் ரஞ்சித். திரைக்கதையில் மிகச்சில சறுக்கல் இருந்தாலும் படத்தை அது பெரிய அளவில் பாதிக்கவில்லை.

தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

அதனாலேயே தற்போது படத்திற்கான ஆரவாரம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி விடுமுறை தினமான நேற்று படத்தைப் பார்க்க ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 11 கோடியை வசூலித்திருக்கிறது.

அதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் சேர்த்தால் தங்கலான் முதல் நாள் வசூல் 13 கோடியாக இருக்கிறது. மேலும் நேற்றை விட இன்று ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன்படி காலை காட்சிகளுக்கே பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. அதனால் இரண்டாவது நாளான இன்று படத்தின் வசூல் இன்னும் உயரும் என தெரிகிறது. அதே போல் வார இறுதி நாட்களிலும் தங்கலான் கொடி பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படத்தை பார்க்காமலேயே சிலர் சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் விக்ரமுக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். தேசிய விருது மட்டுமல்ல பல விருதுகளையும் அவர் வாரி குவிப்பார் என ரசிகர்கள் தங்கலானுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Related Post

குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

Posted by - November 26, 2022 0
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன்…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

Posted by - April 2, 2024 0
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு,…

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா

Posted by - July 25, 2023 0
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *