விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

140 0

#Sengottaiyan

அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.

அதிமுகவில் மோதல்- செங்கோட்டையன் நீக்கம்

தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இன்று இணைந்துள்ளார்.  ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது.

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்தால் தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்

இதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசியிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தூக்கியடித்தார். இதனையடுத்து பாஜக அல்லது திமுகவில் செங்கோட்டையன் இணைவார் என தகவல் வெளியானது.

திமுகவும் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய் கட்சியில் இணைவது மட்டும் தான் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் நல்ல வாய்ப்பு என திட்டமிட்ட செங்கோட்டையன், இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.  இதனையடுத்து தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *