வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

280 0

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று ஒரு நாளில் புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3, 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் சீனாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபரும் அடங்குவார். அவர், உருமாறிய BF7 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய, பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பீகார் மாநிலம் கயா விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மர் சேர்ந்த அவர்கள், ஹோட்டல் ஒன்றில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே கொல்கத்தா விமான நிலையம் வந்த வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில் ஒருவர் துபாயைச் சேர்ந்தவர், மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்தவர். இருவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Post

இந்த ஆண்டில் 4 கிரகண நிகழ்வுகள்… இந்தியாவில் காண முடியுமா?

Posted by - January 5, 2024 0
இந்தூர்: சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல்மாற்றம்

Posted by - March 29, 2023 0
இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை…

சாப்பிட மறுத்து அடம்பிடித்ததால் ஆத்திரம்: கரண்டியால் அடித்ததால் குழந்தை பலி- வீட்டின் பின்புறம் புதைத்த தாய்

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ. கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா…

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் – ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

Posted by - July 4, 2023 0
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *