அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..

149 0

தவெக தலைவர் விஜய் உயிரிழ்ந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையை இருகி கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

போலீசாரின் காவல் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை லாக் அப் மரணம்:

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர், காரில் வைத்திருந்த தன்னுடைய தங்க நகைகள் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், நிகிதாவிற்கு உதவி புரிந்த கோயில் பாதுகாவலர் அஜித்குமார் என்பவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமையே அழைத்து விசாரித்து அனுப்பியுள்ளனர்.

மீண்டும் சனிக்கிழமையன்று காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், விசாரணையில் இருந்தபோது திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவமானது ஓட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

5 காவலர்கள் சஸ்பெண்ட்:

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர், மேலும் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதே போல சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஆறுதல்:

இந்த சம்பவத்தில் உயிரிழந்த  அஜித்குமார் குடும்பத்தினரிடம்  முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  ஆகியோர் தொலைப்பேசியிலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆறுதல் கூறியிருந்தனர்

விஜய் நேரில் ஆறுதல்:

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உயிரிழ்ந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையை இருகி கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்தின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார்.

விஜய் அறிக்கை:

இந்த நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்.

இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Related Post

Generated Image November 17 2025 11 26AM

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…
thumbinal

நான் முதலமைச்சரானால்! #விஜய்

Posted by - February 23, 2026 0
2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்

Posted by - February 24, 2024 0
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

உறுதிமொழி எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்த விஜய்..

Posted by - August 22, 2024 0
விஜய் இன்று ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுஎன்ன, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *