அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

217 0

நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில் 10 முதல் 15 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கொண்டாட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது கிடையாது, என்ற போதிலும் உலகளவில் சிறப்பு தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது இயற்கையாகி விட்டது.

நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும், நமது கவலைகளில் இருந்து ஒருசில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையிலும், பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில், ஆண்டின் 365 நாட்களிலும் ஏதேனும் ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை நம்மில் பலரும் அறிந்து இருப்போம்.செப்.08: இன்று என்ன? - சர்வதேச எழுத்தறிவு தினம் | International Literacy  Day - hindutamil.in

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 26, 1966-ம் ஆண்டு யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், எழுத்தறிவை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது உள்ளிட்டவை சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் ஆகும். இந்தியாவில் எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழு வயதுக்கு மேற்பட்டோர், சிறிய தகவலை எழுதவும், படிக்கவும் தெரிந்து இருந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவராக கருதப்படுவார் என்று தேசிய புள்ளியியல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 74.04 சதவீதம் ஆகும். இதில் அதிக எழுத்தறிவு கொண்டவர்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 93.91 சதவீதம் ஆகும். நாட்டிலேயே மிகக் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில் பீகார் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, எழுத்தறிவு கொண்டவர்களை அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளா, லட்சத்தீவுகள், மிசோரம், திரிபுரா மற்றும் கோவா உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலங்கள் பட்டியலில், பீகார், அருணாசல பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 15-வது அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஆகும். 1947-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் எழுத்தறிவு கொண்டவர்கள் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்

Posted by - September 22, 2023 0
அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த…

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல்மாற்றம்

Posted by - March 29, 2023 0
இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை…

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - April 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *