அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

213 0

ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு உத்தரவு. அது என்ன தெரியுமா.?

ஏடிஎம்-களில் பணம் எடுப்போரின் ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பது தான். இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவிப்பு

தற்போதெல்லாம், ஏடிஎம் சென்று பணம் எடுப்போருக்கு பெரிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பதுதான். ஆம், முன்பெல்லாம், ஏடிஎம்-களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்களும் வைக்கப்பட்டிருந்தன. அதனால், மக்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இப்போதெல்லாம், குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் அதன் பெருக்கல்களில்தான் பணத்தை எடுக்க முடியும்.

இதனால், 500 ரூபாய்க்கும் குறைவாக பணம் எடுக்க விரும்புவோருக்கு, கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிலர், தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைவான பணமே வைத்திருப்பார்கள். அதில், 200, 300 ரூபாய் எடுக்க விரும்பினால், அது சாத்தியமில்லாமல் போகிறது. மக்களின் இந்த முக்கிய பிரச்னையை போக்கும் விதமாகத்தான், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்ன.?

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் குறையை போக்குவதற்காக, ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை, வழக்கமான அடிப்படையில் உறுதி செய்யுமாறும், அதை படிப்படியாக அமல்படுத்தவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள், 75 சதவீத ஏடிஎம்-களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள், அனைத்து ஏடிஎம்-களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், குறைந்த அளவில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருவோர் பயனடைவர். மக்களின் சிரமத்தை உணர்ந்து, ரிசர்வ் வங்கி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Posted by - April 25, 2026 0
பயங்கரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைகளில் முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்ததாக எம்.பி. ராகவ் சதா புகழாரம் சூட்டியுள்ளார். ஆம்…

”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Posted by - December 11, 2024 0
#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார் கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும்…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2023 0
புதுடெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *