அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

296 0

அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்! |  Priest in Ayodhya kills self live streams suicide Facebook

கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, “பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்,” என்று தெரிவித்தார்.

மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

Related Post

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

Posted by - July 14, 2023 0
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத்…

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Posted by - April 21, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *