இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

367 0

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை திமுக எம்பிக்கள் அளித்தனர். முன்னதாக தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நாளை இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு இடையே மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தது. பின்னர் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

புதிதாக 126 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிப்பு

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி…

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

Posted by - August 11, 2023 0
திருவனந்தபுரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய…

சனிக்கிழமைகளில் இந்த 5 விஷயங்களை தவறி கூட செய்யாதீங்க… இல்லன சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்!

Posted by - November 30, 2024 0
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். சனி…

புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை

Posted by - September 4, 2025 0
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *