”உதயநிதிக்கு அமைச்சர் பதவி… சமூக அநீதி” – வானதி சீனிவாசன் விமர்சனம்

216 0

பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் என்றும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதுதான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர். திமுக வாரிசு அரசியல் செய்வதாக ஒரு தரப்பினரும், பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிலும் வாரிசுகள் அரசியலில் இருப்பதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் என்றும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த திரு கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள திரு. மு.க.ஸ்டாலினின் மகனுமான திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை தி.மு.க.வுக்கு மட்டும்தான்.

முதலமைச்சர் திரு ஸ்டாலினின் மகன் என்பதால்தான் இப்படி குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது, தி.மு.க.வில் நடக்கும் இந்த வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால், தி.மு.க.வில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருக்கிறதா?, பா.ஜ.க.வில் இல்லையா?, ராஜ்நாத் சிங், எடியூரப்பா, வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவரின் மகன்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இல்லையா? என, தி.மு.க.வினர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

மேம்போக்காக பார்த்தால் இந்த கேள்வியில் நியாயம் இருப்பது போல தோன்றும், ஆனால், அதில் எந்த நியாயமும் இல்லை. குடும்பத்தில் தந்தையோ, தாயோ அரசியலில் இருந்தால், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்றில்லை. நம் இந்தியா ஜனநாயக நாடு. 18 வயது பூர்த்தி அடைந்த, வாக்களிக்கும் தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. பா.ஜ.க.வும் அதனை தவறென சொல்லவில்லை.

ஆனால், வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது. பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் தலைவராக வருவதுதான் வாரிசு அரசியல், காங்கிரஸில் பண்டிட் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜிவ், அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல், இப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா என ஒரு குடும்பமே கட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.

வேறு ஒருவர் கட்சி தலைவராக இருந்தாலும், காங்கிரஸை நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வழிநடத்துகிறார்கள், மற்றவர்கள் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருந்தாலும், எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருந்தாலும், காங்கிரஸை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு வரவே முடியாது. வருவதை நினைத்து பார்க்க கூட முடியாது.

இதுபோன்ற நிலைதான் தி.மு.க.விலும் உள்ளது. 49 ஆண்டுகள் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், அவருக்கு இணையாக கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், ஸ்டாலினால் தான் தலைவராக முடிந்தது. இதற்கு காரணம் கருணாநிதியின் மகன் என்பதுதானே. இதுதான் வாரிசு அரசியல். முடிவுகளை எடுக்கும், கட்சியை வழிநடத்தும் தலைமை பொறுப்பு ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால், மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காது. இது பெரும் சமூக அநீதி, அதனைதான் பா.ஜ.க எதிர்க்கிறது.

ஸ்டாலின் தி.மு.க. தலைவரானதும், அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவி, மகன் உதயநிதிக்கு வந்துவிட்டது. நான்கு முறை, மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கும், திறமையான பலர் இருந்தும், எம்.எல்.ஏ.வாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார். அமைச்சரானதும் சென்னை நேரு விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்களுடன் உதயநிதி கலந்துரையாடினார்.மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் - வானதி ஸ்ரீநிவாசன்

அப்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போன்ற அமைச்சர்கள், உதயநிதியின் உதவியாளர்கள் போல உடன் இருக்கின்றனர் இதற்கு முன்பிருந்த விளையாட்டு துறை அமைச்சர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்தபோது, இப்படி மற்ற அமைச்சர்கள் உடனிருந்ததில்லை கட்சித் தலைமையின், முதலமைச்சரின் வாரிசு என்பதால்தான் இப்படி நடக்கிறது. இந்த சமூக அநீதியைதான், வாரிசு அரசியல் என்று பா.ஜ.க. எதிர்க்கிறது. என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Posted by - January 18, 2026 0
ACTO-GEO அமைப்பு 2021 தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தப்…

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

“அப்பா எல்லாம் வீண் விளம்பரம்” கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

Posted by - February 19, 2025 0
பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்

Posted by - February 24, 2024 0
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *