Generated Image November 13 2025 10 09AM

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

200 0

“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் நமக்குத்தான் ஒதுக்கி இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடக்காது. ராமதாஸை அங்கு உள்ளவர்கள் தவறாக வழிநடத்தி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக்கும் ராமதாஸுக்கும் உண்மையாக உழைத்தேன்.இனியும் உண்மையாக உழைப்பேன். தேர்தல் நேரத்தில் திமுக-வினர் பூத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவார்கள். நாம் தேர்தலுக்கு முன்பு வரை களத்தில் இறங்கி போராடுவோம். அவ்வளவு உழைப்பை நாம் போடுவோம். ஆனால், அவர்கள் பூத் கமிட்டியில் கவனம் செலுத்தி ஜெயிக்கிறார்கள்.இதை நாம் சரி செய்துவிட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. இதுபோன்ற நிறைய விஷயங்களை நிர்வாகிகளாகிய நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கட்சிக்காக 200 இளம் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். வீடுதோறும் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாகப் போகிறீர்கள்” என்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

Related Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…
dddd e1776493415184

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 18, 2026 0
கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள்…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…
Generated Image February 03 2026 11 32AM

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

Posted by - February 3, 2026 0
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய…

விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

Posted by - September 26, 2025 0
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *