எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

294 0

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான  விஞ்ஞானிகள் ஆய்வு | Omicron mutated corona CMC transmitted by mice.

இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.

விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் தொற்று நோய்கள் அவைகளுக்குள் வேகமாக பரவி பின்னர் மனிதனுக்கு பரவுகிறது. பின்லாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் நோயால் எலிகள் எளிதில் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டில் வெள்ளெலிகளுக்குள் ஒமைக்ரான் வைரஸ் ஒன்றுக்கொன்று பரவி பின்னர் அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவியது தெரியவந்துள்ளது. எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவினாலும் எலிகளுக்கு இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன.

அதன் மூலம் மனிதனுக்கு காற்றில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் 3 வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

இங்கு 79 எலிகளை சோதனை செய்ததில், 16 எலிகளுக்கு, கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ‘பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்’ என அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இது அரிதானது. எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Related Post

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?

Posted by - March 20, 2026 0
ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின்…

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்

Posted by - May 7, 2025 0
தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்த கருத்துக்கு, அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரே ஃபேக்ட் செக் செய்து அவரது மூக்கை உடைத்த சம்பவம்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *