”கண்ணை நம்பாதே” திரை பார்வை..

215 0

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே.

திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமின்றி இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனர் மு. மாறன் இப்படத்தை எப்படி இயக்கியுள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.

இப்படி மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

கதைக்களம்

குடியேருவதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது நண்பருடன் வீடு தேடி வருகிறார், இந்த சமயத்தில் வாடகைக்கு  வீடு கிடைக்கிறது. ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா தங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அதே வீட்டில் தங்க முடிவெடுத்து குடியேறுகிறார் உதயநிதி.

வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்

களுடன் இணைகிறார்.மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில், நடிகை பூமிகா தள்ளாடி கொண்டே தன்னுடை காரை கொண்டு வந்து ஓரு இடத்தில் மோதுகிறார். இதை பார்க்கும் உதயநிதி அவருக்கு என்ன ஆனது என பார்க்க காரின் அருகே செல்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் ஆனால், அவரால் காரை ஒட்டி செல்ல முடியாது என்பதினால் உதயநிதியே பூமிகாவை அவருடைய வீட்டிற்கு காரை ஒட்டி செல்கிறார்.

தன்னை வீட்டில் இறக்கி விட்டதனால் த

ன்னுடைய காரை எடுத்து செல்லுங்கள் என பூமிகா கூறுகிறார். இதனால் பூமிகாவின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார் உதயநிதி.

அடுத்த நாள் காலையில் காரை பூமிகாவிடம் திருப்பி கொடுக்க செல்லும் பொழுது காரின் டிக்கியில் இறந்துப்போய் பிணமாக கிடக்கிறார் பூமிகா. இதனால் உதயநிதியும் அதிர்ச்சியடைக்கிறார்.

பூமிகா எப்படி இறந்தார்? ஒரே இரவில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் உதயநிதி சிறப்பாக நடித்துள்ளார். கொ

லையை யார் செய்தது, இதன் பின்னணி என்ன என்று தேடும் உதயநிதியின் நடிப்பு படத்திற்கு பலம்.

பிரசன்னா வழக்கம் போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னிபெடலெடுக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் பூமிகாவின் நடிப்பு பிரமாதம். கதாநாயகி ஆத்திமா தனக்கு கொடுத்த கதாபாத்திரதை அழகாக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் நடிப்பு படத்துடன் ஒன்றிபோகிறது மற்றபடி அனைவரும் படத்திற்கு தேவையானதை செய்துள்ளார்கள்.

இயக்குனர் மு. மாறன் இயக்கம் நன்றாக இருந்தாலும் புதிதாக நம்மை கைத்தட்ட வைக்கும் அளவிற்கு திரில்லர் காட்சிகள் படத்தில் இட

ம்பெறவில்லை. எளிதாக சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது. திரைக்கதை எங்குமே தொய்வு இல்லை. அது படத்திற்கு பலம்.

ஆனால் பல இடத்தில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. அதை கொஞ்சம் சரிசெய்து இருக்கலாம்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியமான ஒன்று. பின்னணி இசைக்கு பாராட்டு. எடிட்டிங் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். ஒளிப்பதிவு அருமை.

பிளஸ் பாயிண்ட்

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா நடிப்பு பூமிகா நடிப்பு இயக்கம், எடிட்டிங் ஒளிப்பதிவு

மைனஸ் பாயிண்ட்

பல இடத்தில் லாஜிக் மிஸ்டேக் எளிதளவில் சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘கண்ணை நம்பாதே’ கண்டிப்பாக பார்க்கலாம்

5/10

Related Post

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

Posted by - November 29, 2022 0
நடிகை மீனா நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த…

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

Posted by - December 9, 2024 0
நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.. பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின்…

ரீ ரிலீஸான தனுஷின் 3 – சிம்புவின் சிலம்பாட்டம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted by - February 9, 2026 0
ரீ ரிலீஸ் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய…

கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில் வந்தாச்சு முதலில்…

Posted by - February 21, 2026 0
கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில்  வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்..கடைசியாக தமிழில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.   சென்னை: தமிழ் சினிமாவில் “ஸ்டார்”…

‘காடுவெட்டி’ பட பெயர் சென்சாரில் தப்பியது எப்படி? – தயாரிப்பாளர் சோலை ஆறுமுகம் சொன்ன காரணம்

Posted by - March 7, 2024 0
காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம். சோலை ஆறுமுகம் இயக்கத்தில், ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *