காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..

257 0

எப்போதும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி செய்து போரடித்துவிட்டதா? சற்று சத்தானதாகவும், வித்தியாசமானதாகவும், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறுமாறான ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் புட்டு செய்யுங்கள்.

அதுவும் வழக்கமாக செய்யும் புட்டை செய்யாமல், சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பைக் கொண்டு புட்டு செய்யுங்கள். இந்த புட்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டிருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காலையில பாசிப்பருப்பை வெச்சு இப்படி புட்டு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி  சாப்பிடுவாங்க.. | Moong Dhal Puttu Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 1 கப்

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைத்த மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* பின்னர் இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அதில் அரைத்த மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து வேக வைத்த இட்லிகளை எடுத்து, ஓரளவு குளிர்ந்ததும், அவற்றை உதிர்த்து விட வேண்டும்.

* பிறகு உதிர்த்து விட்டதை அளந்து பார்க்க வேண்டும். ஒரு கப் புட்டு மாவிற்கு 1/2 கப் சர்க்கரை என்று சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நீரை ஊற்றி கம்பி பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.

* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் நெய்யை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, ஒரு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு புட்டு தயார்.

Related Post

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - July 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …
tamilserial

சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா?

Posted by - June 13, 2026 0
TRP விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று முன்னணி தொலைக்காட்சிகளில்தான் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP…

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

Posted by - November 3, 2023 0
தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக…

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் யார்-சரத்குமார் சொல்கிறார்…

Posted by - January 30, 2024 0
நடிகை கனகா தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *