கீர்த்தி சுரேஷ்- மீட்டரை வாயில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

141 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் புதுவருடத்தை தாய்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கீர்த்தி சுரேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற தவறிவிட்டது. அத்தபின்னர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆஹா ஓஹோவென ஹிட்டானது. முதல் படத்தில் துவண்டுபோன கீர்த்திக்கு இப்படம் செம கம் போக்காக அமைந்தது. ரஜினி முருகன் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி பிரபலமாக, இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து கீர்த்திக்கு பல படங்கள் வரிசைக்கட்டி நின்றன. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். இப்படியாக தமிழில் கலக்கிய கீர்த்தியின் பார்வை தெலுங்கு சினிமா பக்கமும் திரும்பியது.நீனு லோக்கல் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்த கீர்த்திக்கு ‘மகாநடி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களிலே மட்டுமே நடித்து வருகிறார்.கீர்த்தி சமீபத்தில் தனது பால்ய நண்பர் மற்றும் காதலரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். அவருடன் தாய்லாந்தில் புது வருடத்தை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு காய்ச்சல் வந்ததாகவும் தெர்மாமீட்டரை வாயில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.keerthy suresh

Related Post

ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த ‘சில்லா சில்லா’

Posted by - December 10, 2022 0
அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது…

24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்… 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் “மின்சார கண்ணா”

Posted by - September 11, 2023 0
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான ‘மின்சார கண்ணா’ மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. “உன் பெயர்…

சொல்லுங்க மாமாக்குட்டி.. இந்த ஆண்டு மக்களிடையே அதிகம் டிரெண்டான டாப் 5 வசனங்கள் இதோ!

Posted by - November 26, 2022 0
சென்னை: கதம் கதம் என பாபா முத்திரையை காட்டி ரஜினிகாந்த் சொல்லும் பஞ்ச் வசனங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறி…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *