தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

268 0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த டத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.என்ன நண்பா ரெடியா...' - தளபதி 68 படத்திலும் பாடும் விஜய்? | nakkheeran
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் புரொமோ வீடியோவில், “மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். தொடர்ந்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார். இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது அனிருத் பாடல் ஒலிக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், ‘தளபதி 68’ படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி கொள்கிறேன்” என்று கூறுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இதன் மூலம் ‘தளபதி 68’ முதல் பாடல் ரெடியாகிவிட்டதாகவும் இந்த பாடலை அனிருத் பாடவுள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது.


Related Post

1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்..

Posted by - December 11, 2025 0
படையப்பா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர்…

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

ரிலீஸுக்கு முன் முதல் நாள் ஜெயிலர் செய்த வசூல் சாதனை.. இத்தனை கோடியா

Posted by - August 7, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்,…

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது. விஜய் உடன்…

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *