திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

169 0

நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளரிடம் பேசிய எல்.முருகன்,

இந்த தொகுதியில் எனக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. திமுக வேட்பாளர் ஆ. ராசா செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர் அட்டையை கூட நீலகிரிக்கு மாற்றவில்லை.

ஆ. ராசா, சமுதாயத்தை அவமானமாக பேசுகிறார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர். ஆ. ராசாவை கண்டுகொள்வதில்லை. அவரது வாகனத்தை முறையாக சோதிப்பதில்லை.

திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது. அருந்ததி மக்களுக்காக இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி இந்த நீலகிரி. இங்கு கூட இந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இவர் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மிகத்தில் மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் திமுகவினர் ஆன்மிகத்தை அவமானப்படுத்துகின்றனர்.

இந்த தேர்தல் 2 ஜிக்கும், மோடிஜிக்கும் இடையில் நடக்கும் தேர்தல். இப்பகுதி மக்கள் மீது திமுகவினருக்கு அக்கறை இல்லை. பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் எனத் தெரிவித்தார்.

Related Post

ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டி வருமா.? வைரலாக பரவும் மெசேஜ் – உண்மை என்ன.?

Posted by - September 26, 2025 0
#diwali #dress #diwalidress #purchase #diwalidresspurchase #textail #redymade #cotton #gst #Gstprice #gsttax #fact #gst2500 #taxtextails தீபாவளி நெருங்கும் நிலையில், ரூ.2,500-க்கு மேல் ஆடைகள்…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை- மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Posted by - February 22, 2023 0
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *