நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

294 0

சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகர் ராஜேஷ். அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தா டாக்டர்தான் காரணம்:

அவரது மரணம் குறித்து அவரது தம்பி சத்யன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காலையில் 6 மணிக்கு தூக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருந்தால் நாங்கள் அழைத்துச் சென்றிருப்போம். ஒன்னும் ஆகியிருக்காது. சித்தா டாக்டர் என்று ஒருவர் வந்து பேசிக்கொண்டே இருந்தார். அவர் கதையை பேசியே 2 மணி நேரம் இழுத்தடித்து விட்டார். 6, 6.30 மணிக்கு வந்த அந்த டாக்டர் 8 மணி வரை பேசிக்கொண்டே இருந்துவிட்டார்.

 

அதன்பின்னரே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தோம். மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அந்த லேட் பண்ணதுதான் பெரிய தப்பாகிவிட்டது. நாங்களும் துரிதப்படுத்தாம இருந்துவி்ட்டோம். நெஞ்சு வலினு அவர் சொல்லவே இ்ல்லை. இரவு முழுவதும் தூக்கம் இல்ல. மூச்சு விட முடியலனு சொன்னாரு. நான் கிளம்பி டாக்டரை கூப்பிட போனேன். பாதி தூரம் போன பிறகு அண்ணன் பையன் ஒன்னுமில்லனு சொல்லி வரச்சொல்லிட்டான். நானும் வந்துட்டேன். அதுதான் பெரிய தப்பாகிவிட்டது.

இதய அறுவை சிகிச்சை:

டாக்டரை அழைத்து வந்திருந்தால் அவர் இதன் தீவிரத்தை சொல்லிருப்பாரு. உடனே ஆம்புலன்ஸ் வச்சு பெரிய இடத்துக்கு அழைத்துப் போயிருந்துருக்கலாம். இதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால் இரண்டு வருஷமா சிகிச்சையிலதான் இருந்தாரு. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செஞ்சுகிட்டு இருந்தாரு. 10 நாள் துபாய் போய்விட்டு வந்தாரு. நேற்று முன்தினம் இரவுதான் துபாயில் இருந்து வந்தாரு. நேற்று கூட உடல்சுகம் இல்லை என்று அவரே படுத்துட்டாரு. ”

இவ்வாறு அவர் பேசினார்.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி:

அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளிநாட்டில் உள்ள அவரது உறவினர்கள் சென்னை வரவும் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.  அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாக நடிகராக அறிமுகமான ராஜேஷ் சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து வந்தார். சிவாஜி முதல் விஜய் சேதுபதி வரை பலருடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் ராஜேஷ் நடிகராக மட்டுமின்றி தொழிலதிபராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஷிற்கஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது சகோதரர் மஸ்கட்டில் வசித்து வருகிறார். மகள் கனடாவில் வசித்து வருகிறார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர், ஜானகியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் நடிகர் ராஜேஷ்.

Related Post

கொள்ளை பணத்தில் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்- கோவை மருதமலையில் சிக்கினர்

Posted by - August 7, 2023 0
கோவை: கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட…

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Posted by - June 19, 2024 0
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்துள்ளார் . இதுகுறித்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அதிமுக ட்வீட்

Posted by - December 28, 2022 0
அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *