நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

156 0

 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த ‘மதகஜராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் மேடையில் பேசினார். அப்போது வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார். விஷாலின் கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஷால் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனையில் இருந்து மருத்துவ சீட்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும், தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில், “விஷால் வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல் வலி மற்றும் சோர்வில் இருக்கிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Related Post

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா

Posted by - July 25, 2023 0
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம்…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 18, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…
cinema news

ஒரே மாதத்தில் இறந்த பாக்யராஜ்-பாரதிராஜா-வுக்காக நடக்கப்போகும் விஷயம்…

Posted by - July 3, 2026 0
குரு-சிஷ்யன் தமிழ் சினிமாவில் 80, 90களில் தரமான படங்கள் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என…
ak birthday

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ

Posted by - May 1, 2026 0
அஜித்தின் பிறந்தநாள் மே 1 என்றால் உழைப்பாளர்களை கொண்டாடும் தினம் என்பதை உலகமே அறியும். உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்ந்து இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *