Generated Image January 09 2026 10 45AM

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

78 0

ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி.

பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களைத் தாக்கி கைது செய்வதா என்று கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், அடக்குமுறைகளுக்கு தண்டனை தோல்வி என்று சாடியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல பகுதிநேர ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

தலைமுடியை பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றுவதா?

சில பெண் ஆசிரியர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து  காவல்துறை வாகனத்தில் ஏற்றிய கொடுமையும் நடந்திருக்கிறது. ஆசிரியர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக  2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட  16,500-க்கும் கூடுதலான பகுதி நேர சிறப்பாசிரியர்களில் இப்போது சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு காலத்திற்கு பிறகும் மாதம் ரூ.12,500 மட்டுமே ஊதியம் பெறும் அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும்  நியாயமானது.

அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதா?

ஆனால், ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசு, போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப் போவதாக எச்சரித்திருக்கிறது. அரசு ஆசிரியர்களுக்கு மோசடியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து, அதையும்  செயல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையா?

ஆட்சியும், அதிகாரமும் கைகளில் இருக்கும் திமிரில்  திமுக ஆட்சியாளர்கள்,  அரசு ஊழியர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன் மூலம் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர்.

மக்கள் சக்தியை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முடியாது.  அதிகாரத் திமிரில் அடக்குமுறைகளை ஏவுபவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வி எனும் தண்டனையை வழங்கவிருப்பது உறுதி’’ என்று அன்புமணி அதில் தெரிவித்துள்ளார்.

Related Post

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - December 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…
fasdfr vv

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

Posted by - April 22, 2026 0
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்…
Generated Image November 17 2025 11 26AM

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…
GGG

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

Posted by - April 29, 2026 0
Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின்…
ASDFGH

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *