பழனி கோவிலில் “கந்த சஷ்டி விழா” வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்

270 0

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: மூலவர் சிலையை பாதுகாத்து ஆராய சிறப்பு  குழு | Palani Murugan Temple Kumbabishekam special committee to protect the  Moolavar idol

மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது

இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Post

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *