vijay dmk

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

158 0

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு

திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவிகிதத்தில் வெல்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எங்கள் இயக்கத்திற்கு அறிவு பரிசோதனை குறித்து பேசுபவர் முதலில் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் தேர்தல் பணிமனையை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:

’’நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் , தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட  நாளிலிருந்து ஆலோசனைக்கூட்டங்கள் பாகமுகவர்கள் கூட்டம் என நடக்கிறது இன்று தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது வில்லிவாக்கத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக தேர்தல் பணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளோம்.

அனைத்து முறையும் திமுகதான்

இங்கு திமுகவிற்கு சாதகமான தொகுதி, வில்லிவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு முறையை தவிர அனைத்து முறையும் திமுகதான் வென்றுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், தேர்தல் பணி என அனைத்தையும் இங்கிருந்து தான் துவங்குகிறோம். வெற்றியினையும் இங்கிருந்து துவங்குவோம் என்று உறுதியோடு சொல்கிறோம்..

பலர் அதிகார ஆசையோடு, மமதையோடு எதை வேண்டுமானால், எதைக் கொடுத்தும் வாங்கி விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம். அனைவரையும் மதிக்கவேண்டும். இவர்களுக்கெல்லாம் தக்க பாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும்.

தன் தாயே தடுத்தாலும்

ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைகட்டிக்கொண்டு நின்றவர் இன்று எங்களுக்கு அறிவு பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார். முதலில் இவருக்குத்தான் கீழ்ப்பாக்கம் மனநல மையத்தில் பரிசோதனை செய்யவேண்டும். பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்.

அரசியல் ஞானம் பெற்றவர் திமுக தலைவர். திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி. சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம்.

பேய், பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம்

நாங்கள் யாரையும் சவாலாக நினைக்கவில்லை. எங்களுடைய கொள்கை, கோட்பாடுகள், திட்டங்கள், மக்களோடு உள்ள தொடர்புகள் இவற்றை நம்பித்தான் உள்ளோம். பேய், பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம். மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்.

கூவிக் கூவி அழைத்தாலும் அவர்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. அரசியல் நாகரீகத்தோடு செல்பவர்களுக்கு நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நாகரீகம் தெரியாவதர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் பயம் என்பார்கள். இந்த கத்துகுட்டிகளுக்கு எதாவது ஒரு விதத்தில் பதில் சொல்லிவிடவேண்டும்”.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Related Post

Generated Image January 05 2026 11 52AM

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - January 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…
dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

Posted by - May 1, 2026 0
இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம்…
Generated Image January 23 2026 11 16AM

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…
Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

Posted by - April 3, 2026 0
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *