Generated Image February 03 2026 11 32AM

யாருடன் கூட்டணி.? பிரேமலதா போடும் அரசியல் கணக்கு

93 0

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக அதிமுக கூட்டணியை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டே பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்ததாக பாமக, அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துள்ளது.

அடுத்தாக தேமுதிக எந்த பக்கம் செல்லும் என தெரியாமல் அரசியல் களம் குழம்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கேட்டதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டி விடப்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கை கொடுத்தது தேமுதிக மட்டுமே, எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்காத அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

எந்த கூட்டணியில் தேமுதிக

அதே நேரம் தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என அதிமுக அறிவித்தது. ஆனால் இதனை தேமுதிக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தேமுதிக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் 15 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும், ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் அதிமுக தரப்போ அதிகபட்சமாக 6 முதல் 7 தொகுதியும் ஒரு மாநிலங்களவை பதவி மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதி மட்டுமே என உறுதியாக தெரிவித்து விட்டது. ஆனால் 15 தொகுதிக்கும் குறைவாக கொடுத்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என தெரிவித்து விட்டது. மேலும் நீங்கள் ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராக ஆகவும் நாங்கள் உதவி செய்கிறோம். எனவே எங்களை மதித்து, மரியாதையாக நடத்த வேண்டும் வெளிப்படையாகவே பிரேமலதா தெரிவித்திருந்தார்.

தேமுதிக இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்ந கூட்டத்தில் யாருடன் கூட்டணி என பிரேமலதா முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

image 3

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…
eps cvs

CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!

Posted by - May 25, 2026 0
அதிமுக-வில் எஸ்பி வேலுமணி சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சிலர் தாவி வரும் சூழலில், 3 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…
Generated Image November 03 2025 10 32AM

எனக்கு வெட்கமாக இருக்கிறது; பதவியை துறக்க விரும்புகிறேன்: நேரு முன்னிலையில் திமுக மாவட்டச் செயலாளர் குமுறல்

Posted by - November 3, 2025 0
திமுகவின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளராக க.வைரமணி பதவி வகிக்கிறார். திமுக முதன்மைச் செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு, அமைச்சரின் சொந்த தொகுதியான…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *