பாமாயியிலின் ஆரோக்கிய நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

216 0

மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம்.

கடந்த பல ஆண்டுகளாகவே உணவுகளை சமைக்க பயன்படுத்த கூடிய எண்ணெயாக இருந்து வருகிறது பாமாயில். உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மற்றும் பிரபலமான எண்ணெய்களில் ஒன்றாகவும் இது இருந்து வருகிறது.

சமையலுக்காக மட்டுமல்ல டாய்லெட்ரி பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய மருத்துவத்தில் மலேரியா முதல் முதுகுவலி வரை பல சிக்கல்களுக்கு பாமாயில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. பாமாயிலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.தவிர பாமாயிலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம்.

பாமாயிலின் ஆரோக்கிய நன்மைகள்:

  • பாமாயிலில் வைட்டமின் ஈ-ஆனது tocotrienols என்ற வடிவில் உள்ளது, இது மூளை ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உகவும் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் பண்புகளைக் கொண்டுள்ளது. விலங்குகள் மற்றும் மனிதர்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, பாமாயிலில் உள்ள டோகோட்ரியினால்ஸ் மூளையில் உள்ள மென்மையான பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபேட்ஸ்களை பாதுகாக்க உதவுகின்றன மற்றும் டிமென்ஷியா, பக்கவாதம் ஏற்படும் அபாயங்களையும் குறைக்க உதவுகின்றன.
  • இதய நோய்களுக்கு எதிராக பாமாயில் பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது. இதை நோய் அபாயங்களை ஏற்படுத்தும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் லெவலை குறைப்பது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் எச்டிஎல் கொலஸ்ட்ரால் லெவலை அதிகரிப்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை இதயத்திற்கு பாமாயில் அளிக்கிறது.
  • ரெட் பாமாயில் வைட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. ரெட் பாமாயிலில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளது, இதை உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றி கொள்கிறது.

பாமாயில் பயன்பாடுகள்:

பல தொழில்துறை பயன்பாடுகளை பாமாயில் கொண்டுள்ளது. பாமாயிலில் இருந்து தயாரிக்கப்படும் முக்கிய பொருட்கள் என்று பார்த்தால் சோப்பு, ஹேண்ட் மற்றும் பாடி லோஷன்கள், ஃபேட்டி ஆசிட் மெத்தில் எஸ்டர்ஸ் மற்றும் எபோக்சிடைஸ்ட் பாமாயில் உள்ளிட்டவை அடக்கம்.

பாமாயிலால் ஏற்படும் பக்க விளைவுகள்:ஒருபக்கம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளித்தாலும் மறுபக்கம் பாமயிலில் உள்ள சேச்சுரேட்ட் ஃபேட்ஸ் இதய நோய்களுக்கான அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பாமாயில் கொண்டு தயாரிக்கப்பட்டஉணவுகளை அடிக்கடி அல்லது தொடர்ந்து எடுத்து கொள்வது ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சனையாக மாற கூடும். ஆய்வுகளின் படி சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் சமூகங்களில் பாமாயில் உற்பத்தி விளைவுகளுடன் பல நெறிமுறை சிக்கல்கள் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

Posted by - August 13, 2024 0
சன்  டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய்  டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது. அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங்…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சத்துடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

Posted by - January 20, 2025 0
பிக்பாஸ் 8 எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு…

“Relationship Strong ஆக வேண்டுமா? Couples க்கான Top 7 Practical Love & Life Tips | Tamil Relationship Advice 2025”

Posted by - December 12, 2025 0
Chennai: இன்றைய busy வாழ்க்கையிலே relationship-ல misunderstandings, trust issues, communication gap மாதிரி பிரச்சனைகள் அதிகரிச்சிருக்குது. ஒரு healthy relationship strong ஆகணும்னா love மட்டும்…

முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்

Posted by - May 6, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் ஊரில் 3, 4 மனைவி வைத்திருப்பவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறேன், ஒரே ஒரு திருமணம் செய்து நான் படும் பாடும் அப்பப்பா என படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *