Generated Image January 01 2026 12 01PM

பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

136 0

2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு போனஸ்

தமிழக அரசு ஊழியர்கள்தான் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பாலமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவிளையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன் வரை துறைதோறும் முன்னோடி திட்டங்களை, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தீட்டிச் செயல்படுத்தி வருகிறார்.

பொங்கல் மிகை ஊதியம்- 183 கோடி ஒதுக்கீடு

நாடுபோற்றும் இத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024-2025ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி சுமார் 9 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இந்த உத்தரவின்படி,1. ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

2. தொகுப்பூதியம். சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ஆம் நிதியாண்டில்
மாத குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேச மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்3. “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்ணன் கிராம பணியமைப்பு (முன்ணன் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

Related Post

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

Posted by - July 25, 2023 0
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை…

BBTamil 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விஜய்…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - November 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *