ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்…

209 0

நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள் இந்த ப்ராக்கோலியை வாங்கி சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ப்ராக்கோலியைக் கொண்டு குருமா செய்யுங்கள்.

இந்த ப்ராக்கோலி குருமா சப்பாத்தி, சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ப்ராக்கோலி சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய காய்கறியும் கூட. அடிக்கடி இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி இருக்கும்.

உங்களுக்கு ப்ராக்கோலி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா  இருக்கும்... | Broccoli Kurma Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* ப்ராக்கோலி – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – சிறிது

வதக்கி அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 3

* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் – 1/4 கப்

செய்முறை:

* முதலில் ப்ராக்கோலியை உப்பு மஞ்சள் தூள் சேர்த்த சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ப்ராக்கோலியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* பின் அதில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாற வதக்கியதும், தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் ப்ராக்கோலியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி குருமா தயார்.

Related Post

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…

உங்க உடலில் இந்த மாதிரி துர்நாற்றம் வந்தால் டயபடீஸ் அறிகுறியாக இருக்கலாம்.. உஷாராக இருங்கள்..!

Posted by - March 1, 2024 0
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் டயாபடீஸுக்கான அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினமான காரியம் தான். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஒரு விதமான துர்நாற்றம் குறிப்பாக சுவாசிக்கும்…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted by - September 1, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *