மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

258 0

சென்னை:

மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன..

1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருப்பின், அதற்கான காரணங்களும் பயனாளிகளுக்கு இங்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை, பயனாளிகள் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் அவர்களை இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ்  வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் | 1000rs Magalir Urimai Thogai Application  and Big announcement by ...

இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே, வெப்சைட் (https://kmut.tn.gov.in) ஒன்று தொங்கப்பட்டுள்ளது..

விண்ணப்ப நிலைமை:

இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் வரும்.. அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் 2 நாட்களாகவே இயங்கவில்லை. தற்போது பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபடியே உள்ளதால், இதற்கும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய போகிறதாம்..

முகாம்கள்:

அதன்படியே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இந்நிலையில், நேற்றைய தினம், அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.. அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டிருக்கும் அதே கால அவகாசத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம்…

ஸ்வீட் நியூஸ்:

இந்த திட்டத்தில் இவ்வளவுதான் பயனாளிகள் என்ற இலக்கு எதுவும் கிடையாது. இ சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தது பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

எனினும், இந்த உரிமை தொகை விஷயத்தில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறதாம்.. உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும்? விண்ணப்பிக்க தவறியவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாமா? கள ஆய்வில் உள்ளதாக சொல்கிறார்களே தவிர, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை சொல்லவில்லை..

முகாம்கள் எப்போது:

அதனால், SMS வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு உரிய விளக்கத்தை, அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது புதிதாக எழுந்திருக்கிறது. பொதுமக்களின் இந்த குழப்பத்தை தீர்க்கவே, முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இந்த முகாம்களையும் உடனடியாக நடத்தினால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Related Post

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

சென்னையில் நில அதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை- மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்

Posted by - February 22, 2023 0
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்…

பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!

Posted by - November 21, 2025 0
தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது என்று கூறி மீண்டும்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *