மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

140 0

மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலையொட்டி விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. அதாவது தர்மபுரி மாவட்டத்தில் விஜய் போட்டியிடுவார் என்றும் அதில் எந்த தொகுதி எது என்பதை இன்று விஜய் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக – பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தயாராகி வருகின்றன. இதில் முதல் முறையாக களம் காணும் தவெக 1967 மற்றும் 1977இல் நடந்த அரசியல் மாற்றம் போல் வரும் 2026 தேர்தலும் அமையும் என்று கூறி வருகிறார்.

கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்று கூறியும் விஜய் இந்த தேர்தலை சந்திக்கிறார். இதுவரை விஜய் கட்சிக்கு பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணி வைக்க வரவில்லை. இதனால் விஜய் தன் பலத்தை காண்பிக்க மதுரையில் 2வது மாநாடை நடத்துகிறார். மதுரை பாரபத்தியில் நடக்கும் இந்த மாநாடு முந்தைய விக்கிரவாண்டி மாநாட்டை விட மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. மொத்தம் 506 ஏக்க பரப்பளவில் இந்த மாநாடு நடக்கிறது.1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ள நிலையில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநாட்டில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் மட்டும் இன்று தமிழக அரசியல் கட்சிகளும் விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்த்து உள்ளனர்.

Related Post

’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’

Posted by - February 19, 2026 0
’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’ எந்த…

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - February 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

Posted by - September 15, 2025 0
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *