மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

258 0

டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்யக்கூடும்

கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களிலும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பெல்ட்டில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளதால், விழுப்புரம் முதல் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை வரை பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவை கனமழையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சென்னையில் மிகமிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சமாளிக்கக்கூடிய அளவில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

Related Post

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

Posted by - August 30, 2023 0
சென்னை: பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019-20-ம் ஆண்டில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு…

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - May 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

சரணடையும் நாளிலேயே ஜாமினை பரிசீலிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 25, 2024 0
சரணடையும் நாளில் இருந்து ஜாமின் வழங்க பரிசீலிக்க வேண்டும் என எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன், மருமகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *