மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

286 0

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது

ரேசன் அட்டை இல்லாமல், மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ரேசன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரேசன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது.

மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் புயல் வெள்ள நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்று முதல் ரூ. 6000 வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

Posted by - December 27, 2024 0
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு எஃப்ஐஆர் இணையத்தில் வெளியான நிலையில், குற்றவாளி பாலியல் வன்கொடுமைக்கு உடன்பட வைத்தது எப்படி என பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக…

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

Posted by - July 8, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு…

போராட்ட களத்தில் கலைஞரின் ”பராசக்தி” வசனம்.. தமிழக முதல்வரின் கவனத்தை பெற்ற போராட்டம் . … அடுத்தது என்ன?

Posted by - December 29, 2022 0
  ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி… ஆனால் வெவ்வேறு ஊதியம். இது எப்படி நியாயமாகும்? பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள், பலர் இறந்தும் விட்டார்கள்……

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *