”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

284 0

TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

மிரட்டும் ”மோன்தா” புயல்

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வங்கக் கடலில் நிவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக உருவெடுத்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ள புயல், மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறதாம்.  இது, தொடர்ந்து  வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட்

புயலின் தாக்கமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை:

28-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29-10-2025 முதல் 01-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னதுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

27-10-2025 முதல் 30-10-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Post

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!

Posted by - June 28, 2025 0
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள்…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *