வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

217 0

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படுத்து வரும் நிலையில் படக்குழு சிறிய இடைவெளி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .இதனால் அஜித்துக்கு என்ன ஆனது எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என ரசிகர்கள் ஒருபக்கம் புலம்ப மறுபக்கம் அவர்க்கு எதோ பெரிய பிரச்னை இருப்பதாக பல வகையான தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில் :

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று (மார்ச் 7) வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்றார். அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாககவும் தற்போது அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்

Related Post

2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

Posted by - December 16, 2023 0
இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் நிறைய நல்ல கலைஞர்களை நாம் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும், தங்கள் வீட்டிலேயே நடந்தது போல் மக்கள் கதறி அழுத…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?

Posted by - June 18, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர தீவிர நடவடிக்கையில் உள்ளனர். ஆளுங்கட்சியான…

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *