வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்.. ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

128 0

2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை இவரை சேரும். நடிகர் சங்க உறுப்பினர்கள் 450 பேருக்கு 15 வருடங்களாக பென்ஷன் கொடுத்து உதவி வருகிறார் வள்ளல் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் மோசமான நஷ்டத்தை கொடுத்த 4 படங்கள்ஜூங்கா: :2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மூன்று வேடத்தில் நடித்த படம் இது. இந்த படம் 27 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் ஜுங்கா படம் போஸ்டர் ஒட்டிய காசு கூட வசூலிக்கவில்லை. இதனால் ஐசரி கணேஷ் பெரும் நஷ்டம் அடைந்தார்.பப்பி: நடிகர் வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளிவந்த படம் பப்பி: வெறும் ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படமும் அவருக்கு லாபகரமாக அமையவில்லை. அவருடைய உறவுக்கார பையனான நடிகர் வருண்னை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக காட்டினார்.

பி டி சார்: 2024 ஹிப் ஹாஃப் ஆதி நடிப்பில் வெளிவந்த படம். நல்ல கதைய அம்சம் இருந்தும் கூட இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்த படமும் அவருக்கு நஷ்டத்தை தான்  ஏற்படுத்தியது. சின்ன பட்ஜெட் படங்கள்  என்பதால்  ஐசரி கணேஷ் இந்த நஷ்டத்தை எளிதாக சமாளித்து வருகிறார்.

சுமோ: கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது தூசி தட்டப்பட்ட இந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. சிவா, பிரியா ஆனந்த் போன்றவர்களை வைத்து நகைச்சுவையாக வெளிவந்த இந்த படமும் சரியாக போகவில்லை.

 ஜீனி: ஜெயம் ரவி கேரியரிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த படம். கிளைமாக்ஸ்

காட்சிகளுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்து  ஜார்ஜியாவில் எடுத்துள்ளனர். இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் ஐசரி கணேஷ்..மொத்தமாக இந்த படத்திற்கு 100  கோடிகளுக்கு மேல் செலவழித்து விட்டாராம்.

Related Post

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பையா 2.. ஹீரோ இவரா, செம சர்ப்ரைஸ்

Posted by - June 7, 2023 0
பையா 2 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பையா. இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

Posted by - February 20, 2024 0
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக…

கீர்த்தி சுரேஷ்- மீட்டரை வாயில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Posted by - January 7, 2025 0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் புதுவருடத்தை தாய்லாந்தில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

Posted by - October 7, 2023 0
அயலான் முன்னணி தமிழ் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *