Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் வெளியிடுகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு மீடியாவிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து பேச சென்னை செல்கிறேன் என்று பேட்டியளித்து இருந்தார்.அதன்படி நேற்று அவர் சென்னை வந்துள்ளார், காலை முதல் அவர் சென்னையில் உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Post
ரீ-ரிலீஸாகும் கில்லி
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…
வேட்டையன் திரைவிமர்சனம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…
Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…
சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், சிவகார்த்திகேயனின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. திரையுலக மார்க்கெட்,…
ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா- எத்தனை கோடி தெரியுமா?
நயன்தாரா நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர். தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (292)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

- “என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

- சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

- எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
