vijay 2

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

800 0

திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பேசும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து அறியலாம்.

வீடியோவில் இருப்பது என்ன?

”நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் பக்காவாக ரெடி ஆகி, வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஆளாக உங்கள் பூத்துக்குச் செல்லுங்கள்.

அங்கு உதய சூரியனுக்கு நேராக உள்ள பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லுங்கள். வெளியூரில் இருப்பவராக இருந்தால், முன்கூட்டியே டிக்கெட்  முன்பதிவு செய்து, ஊருக்குச் செல்லுங்கள். கண்டிப்பாக ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்” என்று தவெக தலைவர் விஜய் பேசுவதாக வீடியோ ஒன்று வைரலானது.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி; தீய சக்தி திமுக என்று, ஆளும் திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார்.

விஜய்யா, உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்கிறார்?

இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் பேச்சு அடங்கிய வீடியோ பார்ப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன? ஒவ்வொரு பேச்சிலும் திமுகவைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்யா, உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்கிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனியார் செய்தி உண்மைத் தன்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த எக்ஸ் பதிவில், ‘ஏப்ரல் 23 அன்று சென்று உதயசூரியனுக்கு நேரே உள்ள பட்டனை அழுத்தி ஓட்டு போடுங்கள்’ என தவெக தலைவர் விஜய் நேற்றைய (மார்ச் 30) பிரச்சாரத்தின்போது கூறியதாகக் கூறி பலரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.

எடிட் செய்து பரப்புவதா?

உண்மையான வீடியோவில் அவர் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றே கூறியிருப்பார். வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்’’ என்று தனியார் செய்தி உண்மைத் தன்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Related Post

OPS

ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா?

Posted by - February 28, 2026 0
அதிமுக-வால் ஓரங்கட்டப்பட்டு திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஆட்சி அமைந்தால் சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசி என்று மக்களால் அறியப்பட்டு…
Generated Image February 09 2026 3 52PM

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…
Generated Image November 19 2025 10 32AM e1763528556825

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…
CHT

விஜய்க்கு விசில் சின்னம்..

Posted by - January 22, 2026 0
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய…
Gemini Generated Image l0si72l0si72l0si

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *