Gemini Generated Image 5h9m255h9m255h9m

அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

213 0

வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போல வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் பொருளாதார ரீதியான வரவு, செலவுகளுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியமான அங்கமாக வங்கி உள்ளது. வங்கிச் சேவையை நாட்டில் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே ஆகும்.

அக்கவுண்டை மாற்றாமலே வங்கியை மாற்றலாம்:

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது, ஒரு வங்கியில் பயன்படுத்திய வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியே இந்த பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் ஆகும். பொதுவாக, ஒருவரின் வங்கிக்கணக்கு எண்ணுடன் மியூச்சுவல் பண்ட், சம்பளகணக்கு, கடன் தவணை போன்ற பல்வேறு முக்கியமான விவரங்கள் தொடர்பில் இருக்கும். இதனால், வங்கிக்கணக்கை மாற்றும்போது அனைத்து சேவைகளிலும் புதுப்பிக்கும் சூழல் உண்டாகும்.

பலன்கள் என்னென்ன?

ஆனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கியை மாற்றிக்கொண்டாலும் வங்கிக்கணக்கு எண் மாறாது. அனைத்து பேமெண்ட் மேண்டேட்களும் தானாகவே மாறிவிடும். மேலும், இஎம்ஐ முறையும் மாறாமல் புதிய வங்கியில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும். வங்கியின் சேவை பிடிக்காவில் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதி எளிதாக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர்பு வைப்பு கணக்கு எண் ஆகிய கணக்குகள் உள்ளது. பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கே பயன்படுத்துவார்கள்.

வர்த்தகம் செய்பவர்கள், வியாபாரிகள் நடப்புக்கணக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த கணக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ள இந்த செயல்முறையானது எந்த வங்கிக்கணக்கு பயனாளர்களுக்கு? என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கே இந்த சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Generated Image November 06 2025 10 33AM

ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் – ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?

Posted by - November 6, 2025 0
Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரே மாதிரியான ரீசார்ஜ் கட்டணத்தில் முற்றிலும் வித்தியாசமான பலன்களை வழங்குவது குறித்து…

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - June 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Posted by - April 21, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *