விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

371 0

அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

தனது ரசிகர் மன்றத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி மக்கள் நலப்பணிகளை செய்து வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் பாஜகவின் அழுத்தத்தால் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும் அவரை பாஜகவின் பி டீம் என்றும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், தான் அரசியலுக்கு வரும்போது காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருந்ததால் தான் என்ன அவர்களின் பி டீமா என கேள்வி எழுப்பியதோடு, விஜய் பாஜகவின் பி டீம் கிடையாது என மறுத்தார்.மேலும், தங்களுடைய கட்சி வாக்குகள் எதுவும் இதனால் விஜய்க்கு செல்லாது என்றும், மக்களை சந்தித்து அவரது கொள்கைகளை முன்வைத்து வெல்லட்டும் என்றார்.

Related Post

திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்‍க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 26, 2022 0
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த…

விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

Posted by - May 10, 2024 0
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு…

பள்ளியில் கூல் லிப் பயன்படுத்தும் மாணவர்கள் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்..!!

Posted by - August 24, 2024 0
சென்னையில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *