விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

204 0

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.

மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை, அவரது மனைவி பிரேமலதா, குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, போலியோவால் கை,கால்களை இழந்த நிலையிலும் தொழில் முனைவோராக உருவெடுத்த கர்நாடகாவின் ராஜண்ணாவுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும்,  132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.  முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பிரமலதா, விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் இந்த பத்ம விருது சமர்ப்பணம் என கூறினார்.இதேபோல், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாரம்பரிய  வள்ளிக் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.போலியோவால் கை, கால்களை இழந்த நிலையிலும் தளராது தனது தன்னம்பிக்கையால் பொறியாளராகவும், தொழில் முனைவோராகவும் உருவாகி பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதுடன் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கர்நாடகாவின் கே.எஸ். ராஜண்ணாவுக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனிடையே, பத்ம விருதுகளை பெற்றவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பில் இரவு சிறப்பு விருந்து டெல்லியில் அளிக்கப்பட்டது.

Related Post

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்”.. மாஸாக புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Posted by - January 1, 2025 0
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்…

போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

Posted by - September 26, 2024 0
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில்…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *