விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

206 0

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சைமா விருது விழாவில் இரண்டு விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஐஸ்வர்யா  ராஜேஷ்.! எந்தெந்த படத்துக்காக விருது கொடுத்தாங்க தெரியுமா ...

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் மே 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி, இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்புக் கூட  வரவில்லை.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் | Tamil cinema actress aishwarya rajesh  speaks about award ...

நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.

Related Post

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

Posted by - September 9, 2024 0
போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன.…

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா… அப்போ இந்த கோயில்களுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

Posted by - November 23, 2024 0
நமது கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் கோடீஸ்வரராக மாறுவது என்பது கடினமான ஒன்றல்ல. ஆனால் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு சில கோவில்களுக்கு சென்று வந்தால்…

👉 சோனி அறிமுகம் செய்யும் புதிய தமிழ் தொலைக்காட்சி 😲 | ‘VIZHA’ Channel Full Details

Posted by - February 10, 2026 0
Sony நிறுவனம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்காக புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகம் செய்துள்ளது! ‘VIZHA’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல், சினிமா, சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,…

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - December 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *