அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

421 0

16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

இந்தப் போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மாலை முதலே மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஓவர்களைக் குறைத்தாவது போட்டி நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விட்டு விட்டு மழை தொடர்ந்தது. இதனால், போட்டியை ஒத்திவைப்பதாக இரவு 11 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் டே-வான இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஏற்கனவே பெற்ற டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி நேரில் கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?

Posted by - March 29, 2025 0
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை…

ஆஸி., வீழ்த்தி.. சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய இந்திய அணி – ஜெமிமா வெறித்தனம்

Posted by - October 31, 2025 0
Jemimah Rodrigues IND Vs AUS: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதோடு, இந்திய அணி பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளது. Jemimah…

ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

Posted by - December 4, 2025 0
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.…
Generated Image November 15 2025 10 36AM

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

Posted by - April 21, 2025 0
மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *