IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

163 0

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் போட்டியில் இன்று மோதுகின்றன.

இந்தியா பேட்டிங்:

மிகவும் முக்கியமான இந்த போட்டியில் இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்றார். டாஸ் வென்ற ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தற்போது இந்த தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கும் நிலையில், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கடந்த போட்டியில் ஆடிய கருண் நாயருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட கருண் நாயர் லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் ஆகிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிய 6 இன்னிங்சிலும் சொதப்பினார். இதனால், அவருக்கு பதிலாக மீண்டும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் லெவன்:

இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன்கில், ரிஷப்பண்ட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்சுல் கம்போஜ், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், லியாம் டாவ்சன், கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியிலும் ஜோஷ் ட்ங் ஆடவில்லை.

இந்திய அணியில் ராகுல், கில், ரிஷப்பண்ட், ஜடேஜா பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், அன்சுல் கம்போஜ் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். பும்ரா, முகமது சிராஜ் தங்களது வழக்கமான தாக்குதலை நடத்தினால் இங்கிலாந்து நெருக்கடி ஆகும். முதல் டெஸ்ட் போட்டி சதத்திற்கு பிறகு சொதப்பி வரும் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

வரலாற்றை மாற்றுமா இந்தியா?

ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அணி 1936ம் ஆண்டு முதல் அங்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. அங்கு 9 டெஸ்ட் பாேட்டியில் ஆடிய இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. அந்த மோசமான வரலாற்றை இன்றைய போட்டி மூலம் இந்திய அணி மாற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Post

பலம், பலவீனம் என்ன?உலகக்கோப்பை யாருக்கு?

Posted by - June 29, 2024 0
 இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் தொடங்கி அரையிறுதி வரை, வெற்றியை மட்டுமே வசப்படுத்திய சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும், இன்று…

மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை… ரோஹித் சர்மா சதம் வீண்!!

Posted by - April 15, 2024 0
ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *