நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி… மரண மாஸ் வீடியோ

163 0

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ் தோனி நேற்றைய போட்டியில் பேட்டிங் இறங்கிய போது ஒட்டுமொத்த சேப்பாக்கமும் அதிர்ந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எம்.எஸ் தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

 

போட்டியின் 19 ஒவரில் ஜடேஜா ஆட்டமிழந்த பிறகு தோனி களமிறங்கினார், அவர் மைதானத்தில் உள்ளே நுழைந்தவுடன் டிஜே நீ போட்டு வச்ச தங்க குடம் பாடல் போடப்பட்டது அப்போது மொத்த மைதானமே அதிர்ந்தது. அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த போட்டியில் இரண்டு பந்துகளை சந்தித்த தோனி ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து போட்டியை முடித்துக்கொடுப்பார் என்று  ரசிகர்களுக்கு ஒரு சின்ன ஏமாற்றமாக அமைந்தது.

சென்னை அணி வெற்றி:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(23.03.25) நடந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிப்பெற்ற சென்னை அணி முதலில்  பந்து வீசியது, சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு  155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் நூர் அகமது 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

 

156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு  19.1 ஓவரில் இலக்கை எட்டியது, கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் அரைசதம் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக வீரர் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுக்ளை எடுத்தார்.

Related Post

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

CSK Vs RR.. ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி..!

Posted by - April 13, 2023 0
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில்  வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள்…

IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

Posted by - March 23, 2024 0
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள…

கம்பீரை வம்புக்கு இழுத்த கோலி – முழு வீடியோ இதோ!

Posted by - May 2, 2023 0
கம்பீர் – விராட் கோலி இருவரும் மோதிக்கொள்வது போல் ஆக்ரோஷமாக நேருக்கு நேர் நிற்க இரு அணி வீரர்களும், நிர்வாகிகளும் சூழ்ந்தனர் ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று லக்னோ…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *