அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

245 0

விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் விஜய் தனது முதல் மாநாட்டில் பேசியபோது திராவிடம், தேசியம் இரண்டும் ஒன்று என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. விஜய்யை விமர்சிக்கும்படி சீமான் தரைக்குறைவாக பேச ஆரம்பித்தார். உலக மக்களை விஜய் இணைகிறார் என்றால் உலக வெற்றிக் கழகம் என்று வைக்க வேண்டியது தானே. எதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்று வைத்துள்ளார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரை விட விஜய் என்ன பெரிய தலைவரா என்றும் சீமானின் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் திமுகவுக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கும் போது எல்லோரும் அவரை வரவேற்றனர்.

விஜய்க்கு எதிராக சீமான் போடும் திட்டம்

திமுக ஒரு வளர்ந்த கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சீமான் இவ்வாறு விமர்சிப்பது பலருக்கும் நம்பிக்கை இழக்க செய்கிறது. ஆனாலும் விஜய் சீமானின் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை அஜித்தை கண்டுகொள்ளாத சீமான் திடீரென அவருக்கு வாழ்த்து சொல்வது அஜித்தின் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்கான வழியாகத்தான் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்தவுடன் பல கட்சிகள் இதேதான் செய்து வருகிறார்கள்.

ஏனென்றால் விஜய்யின் ரசிகர்கள் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள். இதனால் இப்போது அஜித் ரசிகர்களை கவரும் நோக்கில் மாற்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இருப்பதாக அந்தணன் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

Related Post

Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026 0
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
tvk vijay

CPM Slams TVK: “ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல..” – தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!

Posted by - May 26, 2026 0
“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல” என்று சிபிஎம் த மாநில செயலாளர் பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசியலில் தவெக…
ASDFGH

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - September 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *